புதன், 7 ஜூலை, 2010


தமிழுக்கு தொண்டாற்றிய அய்யா திசு அவினாசிலிங்கம் செட்டியாரைப் பற்றி யாரும் பேசவில்லையே என உள்ளூர ஆதங்கம்.அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடந்த முன்னாள் தமிழக மேலவை உறுப்பினர் சனார்த்தனம் எழுதிய எங்கள் அய்யா புத்தக வெளியீட்டிற்கு சென்றேன்.இலங்கை எம்.பிக்கள் வந்திருந்திருந்தனர்.புத்தகத்தில் சரக்கில்லை.அருளின் ஆற்றல் புத்தகத்தில் இருந்த தகவர்கள் அப்படியே இருந்தது.ஏமாற்றமடைந்தேன்.நாடக நண்பர் குமரேசனின் மணிக்கொடி நாடகம் பார்த்து விட்டு வீடு திரும்பினேன்.

26 ஆம் தேதி தமிழுக்கும் அமுதென்று பேர் என்ற தலைப்பில் வாலி தலைமையில் கருத்தரங்கம் நன்றாக இருந்தது.வாலி பராவாயில்லை.சிலர் அமுதத்தை விஷமாக்கினர்.செம்மொழித் தகுதி கருத்தரங்கில் வா.செ.கு விளக்கினார்.கா.ப.அறவாணனின் கடல் கடந்த தமிழ் கருத்தரங்ஙகம் சோபிக்கவில்லை.சாலமன் பாப்பையா படடிம்ன்றத்தில் பாரதிராஜா எதற்கென்று தெரியவில்லை.மக்களைக் குதறியெடுத்து விட்டார்.லியோனி சிரிக்க வைத்தார்.லியாகத் அலிகானின் மேடை அநாகரீகத்தை நினைவுபடுத்தினார்.அச்சுத்துறைப் பக்கம் பேசிய திருப்பூர் கிருஷ்ணன் இன்னும் வலுவாகப் பேசியிருக்கலாம்.சரக்கு அதிகமிருந்தது.ஆனால் அவரிடம் இல்லையோ அல்லது வெளிப்படுத்தவில்லையோ எனத் தெரியவில்லை. நல்லவேளை நடுவர் தீர்ப்பை மாற்றிச் சொல்லவில்லை.அச்சுப் பக்கம்தான் இருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக