
25 ஆம் தேதி நடந்த வைரமுத்துவின் கவியரங்கம்,தமிழர் வாழ்வோடு பெரிதும் சார்ந்திருக்கும் இலக்கியம் எது என்ற பட்டிமன்றம் டிவியில்.கலைஞர் தலைமையில் நடந்த எங்கும் தமிழ் எதிலும் தமிழ் கருத்தரங்கத்தில் லியாகத் அலிகான் கட்சி மேடையில் பேசுவது போல பேசி வெறுப்பேற்றினார். இராசா,யெச்சூரி,தங்கபாலு,திருமாவளவன் நன்றாகப் பேசினர்.அனைவரும் கலைஞரையே புகழ்ந்தனர்.பொதுமக்களிடம் சிறுஅதிருப்தி.இருப்பினும் கோவையில் இம்மாநாட்டை நடத்திவிட்டார் கலைஞர்.ஆதனால் இன்னும் புகழலாம்.மதுரையில் எம்.ஜி.ஆர். உலகத் தமிழ்மாநாடு நடத்தியபோதும் இதே போல்தான் புகழ்ச்சி என்று கேள்விப்பட்டேன்.ஆய்வரங்க அமர்வுகளில் பங்கேற்க நானும் விண்ணப்பித்திருந்தேன்.ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை.ஆதங்கம்தான்.ஆனலும் அனுமதி கிடைத்தவர்கள் அதிகமானோர் கலந்து கொள்ளவில்லை என்பது ஊடகங்கள் கருத்து. விரும்பியவருக்கு வாய்ப்பில்லை.கிடைத்தவர்கள் பங்கேற்கவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக