




















இந்தியப் பாரம்பரியத்தின் பெருமையை உலகறியச் செய்த சுவாமி விவேகானந்தர் முதன்முதலில் தமிழ்நாட்டில் தான் தன்னுடைய கருத்துக்களைப் பரப்ப ஆரம்பித்தார்.அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பும்போது தமிழ்மக்கள்தான் மிகச்சிறந்த வரவேற்பை அளித்தனர்.அவர் கூறுவார்:நம்முடைய கருத்துக்கள் பாமர மக்களையும் சென்று சேரவேண்டுமெனில் அந்தந்தப் பகுதியில் உள்ள தாய்மொழியில் எடுத்தியம்புங்கள்.தாய்மொழி பெற்றத் தாயை விட மிகவும் மேலானது.ஆகவே ஒரு போதும் தாய்மொழியை விட்டுக் கொடுக்கதீர்கள்.
அந்த வீரமகனின் 150ஆவது பிறந்த தின ஆண்டு 2014ல் வருகிறது.அதனையொட்டி இந்திய அரசின் சார்பில் ஏற்பாடு செய்த கண்காட்சி ரயில் 22,23.7.2011ஆகிய தேதிகளில் கோவைக்கு வந்தது.அதன் காட்சிகள் சில தங்களின் பார்வைக்கு....