புதன், 7 ஜூலை, 2010


27ஆம் தேதி நடந்த விழாவில் சிவக்குமார் பேச்சு நன்றாக இருந்தது. எல்லாம் தொலைக்காட்சி வழியாகத்தான் பார்வை.நிறைவு விழாவில் பிரணாப் முகர்ஜி நன்றாகத் தான் பேசினார் (?). கோவை எம்.பி நடராஜன் மொழி பெயர்த்து வைத்திருந்ததைப் படித்தார்.பின்னர் மொழி பெயர்த்தல் பற்றி முதல்வர் ஏதோ விளக்கமளித்தார். ஏனென்று தெரியவில்லை.உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் 10கோடி ரூபாய் வேண்டுகோளுக்கு உத்தரவு கிடைத்தது.ஆனால் தமிழுக்காக முதல்வரிடமிருந்து இன்னும் எதிர்பார்த்தேன்.பட்ஜெட்டில் ஏமாற்றி விட்டார்.5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநாடு நடக்கும் என்றுள்ளார்.பார்ப்போம்.மத்திய அமைச்சர் ராசாவுக்கு பேசத் தடங்கல்கள்.பேசவிட்டிருக்கலாம்.கூட்டம் அதிகம்தான்.ஏற்பாடுகளும் பலம் தான்.பாராட்டு பலருக்கு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக