
கோவையில் தமிழ்ச் செம்மொழி மாநாடு மிகப் பெரிய தாக்கத்தை உண்டாக்கிவிட்டது.பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையில் முதல்வர் கலைஞர் கருணாநிதி இதனை ஏற்பாடு செய்திருந்தார்.தொடக்க நாளுக்கு முன்தினம் கோவையே மிளிர்கிறது எனப் பலர் சொல்லக் கேட்டு என்மகன் கோகுலுடன் தினமணி அலுவலகத்திற்கு சென்றுவிட்டு கொடிசியா சென்றேன்.போகும் முன்பு புலியகுளத்தில் சிறிது தேனீர். மாநாட்டு ஏற்பாடுகள் சிறப்பாகத்தான் இருந்தது. புத்தகக் கண்காட்சியைச் சுற்றி பார்த்தோம். மொழி என்ற தமிழ் ஆடை வடிவமைப்பாளர்களிடம் சிறிது பேச்சு. பின்னர் விட்டிற்கு திரும்பி விட்டோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக