புதன், 7 ஜூலை, 2010


23ம் தேதி தொடக்கவிழா சிறப்பாக நடந்தாலும் சிலரது ஆங்கில் பேச்சுகள் நெருடலாக இருந்தது. வா.செ.கு மட்டும் பரவாயில்லை.மாலையில் நடந்த எழிலார் பவனி தமிழ்க் கலாச்சாரத்தை பிரதிபலித்தது. பார்க்கப் போகலாம் என நினைத்திருந்தேன்.நெரிசலாக இருக்கும் என செல்லவில்லை. கோகுல் சென்று வந்தான். மாலையில் தொலைக் காட்சியில் பலர் பங்கேற்றதைப் பார்த்து நாம் பங்கேற்கவில்லையே என ஆதங்கப்பட்டேன்.பாரதியார் வேடமணிந்த நபர் மிகவும் கவர்ந்தார்.ரகுமானின் செம்மொழிப் பாடல் நன்றாக இருந்தது.உத்வேகமளித்தது.வரவேற்பு முன்முகப்பு பனை ஓலைகளால் வேயப்பட்டிருந்தது.ஒளிரவில்லை ஆதலால் பிடிக்கவில்லை.பொன் வண்ணமாக்கியிருக்க வேண்டும். இரவில் செம்மொழியாக தமிழ்மொழி செம்மொழி பெரிய எழுத்துக்கள் நன்கு மிளிர்ந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக