ஞாயிறு, 27 ஜூன், 2010

இந்த வலைக்குள் புகுமுன்...

இந்த வலை தளத்தில் தமிழ்செம்மொழி தொடர்பான தமிழரின் பண்பாடு, கலைகள்,கவிதைகள்,தமிழில் வெளியிடப்படும் புத்தக விமரிசனங்கள் பரிந்துரைகள்,இலக்கிய அமைப்பின் செயல்பாடுகள்,தமிழ்ச் செம்மொழி தொடர்பாக நடக்கும் அனைத்து விதமான நிகழ்வுகளினால் என் மனதில் எழும் கருத்துக்களை வெளியிடும் ஒரு தளத்தை உருவாக்க விழைந்தேன்.அந்த அடிப்படையில் உருவானதுதான் இத்தளம்.இது முழுக்க முழுக்கு என்னுடைய சொந்தக் கருத்துக்கள்.இதில் வரும் கருத்துக்கள் யாரையும் புண்படுத்த வேண்டும் என்று வெளியிடப்பட்டதல்ல.என் மனதில் பட்டதை சொல்ல ஒரு வாய்ப்பாக மட்டும் இதைக் கருதுகிறேன்.

இதற்கு பெயர் வைக்க எண்ணும் போது தமிழ்பானை என்ற பெயர் ஞாபகத்திற்கு வந்தது.கொங்கு மண்டலத்தில் கோடைக் காலங்களில் மண்பானைகளில் தண்ணீர் வைத்துக் குடிப்பர்.அது மிகவும் குளிர்ச்சியாக இருக்கும்.எத்தனையோ பானங்கள் கிடைத்தாலும் இப்பானையில் உள்ள தண்ணீரை அதிகம் விரும்பவர்.உடலுக்கு மிகவும் குளிர்ச்சியைத் தருவதோடு மனதிற்கு மகிழ்ச்சியையும் இது தரும்.அந்த பானையின் பெயரையே இதற்கு தேர்வு செய்தேன்.இன்னொன்று இந்த பானையில் உள்ள நீரை நீங்களும் மொண்டு அருந்தலாம்.பானையில் நீர் குறைவாக இருந்தால் தண்ணீரைக் கொண்டு நீங்களே நிரப்பலாம்.இது முழுக்க முழுக்க தமிழுக்காக மட்டுமே.வேறு கருத்துக்களில் இதில் தயவு செய்து உரையாடலைத் தவிர்க்கலாமே....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக