
செம்மொழி மாநாட்டையொட்டி கோவையில் நடந்த புத்தகக் கண்காட்சிக்கு எனது நண்பர் ரா.சங்கரநாராயணனுடன் சென்றிருந்தேன்.தினமணி ஆசிரியர் திரு.வைத்தியநாதன் வாசகர்களைச் சந்தித்துக் கொண்டிருந்தார்.பழ.கருப்பையா விவகாரம்,தமிழக இ.காங்கிரஸ் சட்ட மன்ற எதிர்கட்சித் தலைவர் மறைவு குறித்து பேசிக் கொண்டிருந்தார். தினமணியை செழுமைப்படுத்த வேண்டும் என்ற வாசகர்களின் கருத்திற்கு அவர் பல விஷயங்கனை அவர்களுடன் பகிர்ந்து கொண்டிருந்தார்.நெடுநாளைய நண்பரும், இயற்கை ஆர்வலருமான செயப்பிரகாசைச் சந்திக்க நேர்ந்தது. வெற்றியடைந்த செம்மொழி மாநாட்டினையொட்டி நடந்த பழ.கருப்பையா விவகாரம் பற்றி குறித்து அவர் தெரிவித்த காரணம் தான் யோசிக்க வைத்தது.மற்றபடி புத்தகக் கண்காட்சி மொழி ஆடை வடிவமைப்பாளர்கள் மனதைக் கவர்ந்தனர்.
தங்களின் பதிவுகளை இன்று இணையத்தில் மென்னடையில் கண்ணுற நேர்ந்தது. பதிவுகள் சிறப்பு. மேலும் தொடரவும்.
பதிலளிநீக்கு