தமிழ்ப் பானை
எடுக்கலாம்... நிரப்பலாம்.
சனி, 22 ஜூலை, 2017
வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011
புதன், 27 ஜூலை, 2011
கவிஞர் சிற்பி. பாலசுப்பிரமணியம் பவள விழா
First Published : 27 Jul 2011 12:38:04 PM IST
கோவை, ஜூலை 26: கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியத்தின் பவள விழா கோவையில் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
முதல் நாள் நிகழ்வுகள்: சிற்பியின் பவள விழா, கோவை கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் 30ம் தேதி, சனிக்கிழமை மாலை 3.30 மணியளவில் அருளாளர் வாழ்த்து மங்களத்துடன் தொடங்குகிறது. பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகள் தலைமை வகிக்கிறார். முன்னாள் துணைவேந்தர் ப.க.பொன்னுசாமி வரவேற்புரையாற்றுகிறார்.
÷திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி பொன்னம்பல அடிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகள், பழனி சாதுசாமிகள் திருமடம் சாது சண்முக அடிகள், காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், தென்சேரிமலை திருநாவுக்கரசு மடாலயம் முத்துசிவராமசாமி அடிகள், பேரூர் ஆதீனம் இளையபட்டம் மருதாசல அடிகள், ஸ்ரீ லலிதாம்பிகா அறக்கட்டளை ஸ்ரீ ஜெகநாத சுவாமிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
சிற்பியின் கவிதை உலகம்: தொடர்ந்து நடக்கும் கவியரங்க நிகழ்ச்சிக்கு கவிஞர் புவியரசு தலைமை வகிக்கிறார். பேராசிரியர் ஜே.மஞ்சுளாதேவி வரவேற்கிறார். கவிஞர்கள் அறிவுமதி, பழனிபாரதி, சிதம்பரநாதன், இளம்பிறை, சக்திஜோதி, நா.முத்துகுமார், விஜயகுமார் ஆகியோர் பங்கேற்கின்றனர். வானம்பாடிக் கவிஞர்களுக்குச் சிறப்பு செய்யப்படுகிறது.
வாழ்த்தரங்கம்: அடுத்து கோவை ஞானி தலைமையில் இலக்கிய அமைப்புகளின் வாழ்த்தரங்கம் நடக்கிறது. மா.நடராசன் வரவேற்கிறார். கலை இலக்கியப் பெருமன்றம் இரா.காமராசு, எழுத்தாளர் பொன்னீலன், இராம. வெள்ளையப்பன், ஆர்.கே.ராமசாமி, கவிதாசன், தேனரசன், தமிழன்பன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
சிந்தனைத் திருவுலா: இறுதியாக, மாலை 6.30 மணியளவில் சிந்தனைத் திருவிழா நிகழ்ச்சி நடக்கிறது. ம.ரா.போ.குருசாமி தலைமை வகிக்கிறார். பேராசிரியர் சி.மா.ரவிசந்திரன் வரவேற்கிறார். சுகி.சிவம், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் எம்.கிருஷ்ணன், மரபின் மைந்தன் முத்தையா, எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் ஆகியோர் இதில் பங்கேற்கின்றனர்.
2-வது நாள் நிகழ்வுகள்: ஞாயிற்றுக்கிழமை (31ம் தேதி) காலை 9.30 மணியளவில் சிற்பியின் படைப்புகள்- ஆய்வு நிகழ்ச்சி நடக்கிறது. சிற்பியின் கவிதை இசை வடிவம் என ரவி சுப்பிரமணியம் பேசுகிறார். கவிஞர் அப்துல் ரகுமான் தலைமை வகிக்கிறார். தி.பெரியசாமி வரவேற்கிறார், தி.பெரியசாமி, கி.நாச்சிமுத்து, இ.சுந்தரமூர்த்தி, பிரபஞ்சன், கவிஞர் மு.மேத்தா ஆகியோர் பங்கேற்கின்றனர்.
சிற்பி கவிதை-நாடக வடிவம்: இத்தலைப்பில், காலை 11 மணியளவில் திலீப்குமார் குழுவினர் பங்கேற்கின்றனர். பிற்பகல் 2.30 மணியளவில் கலைஞர் வேலு சரவணன், ஓசை க.காளிதாஸ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
மொழி என்னும் அரண்: பகல் 11.30 மணியளவில் பழ.நெடுமாறன் தலைமையில் மொழி ன்னும் அரண் என்ற தலைப்பில் நிகழ்வு நடக்கிறது. பாவலர் இரணியன் வரவேற்கிறார், எழுத்தாளர் நாஞ்சில் நாடன், வ.ஐ.ச. ஜெயபாலன், புலவர் செந்தலை ந.கவுதமன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
சிற்பி இலக்கிய விருது: மாலை 3.30 மணிக்கு "சிற்பி இலக்கிய விருது' வழங்கப்படுகிறது. விழாவுக்கு "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன் தலைமை வகிக்கிறார். கவிஞர் சிற்பி வரவேற்கிறார். மலையாளக் கவிஞர் கே.சச்சிதானந்தன் விருது, பரிசுகளை வழங்குகிறார்.
÷சிற்பி இலக்கிய விருது கவிஞர்கள் அபி, லீனா மணிமேகலைக்கு வழங்கப்படுகிறது. சிற்பி இலக்கியப் பரிசு, கவிஞர்கள் பா.சத்தியமோகன், சென்னிமலை தண்டபாணிக்கு வழங்கப்படுகிறது.
÷நூலாசிரியர்களான கே.எஸ்.சுப்பிரமணியம், பி.மருதநாயகம், நவபாரதி, பதிப்பாளர்களான சேது சொக்கலிங்கம் (கவிதா பதிப்பகம்), மீனாட்சி சோமசுந்தரம் (மணிவாசகர் பதிப்பகம்), மீரா கதிர் (அகரம் பதிப்பகம்), வேனில் (நந்தினி பதிப்பகம்) ஆகியோர் கெüரவிக்கப்படுகின்றனர்.
நூல் வெளியீடு: மாலை 4.30 மணியளவில் நூல் வெளியீட்டரங்கம் நடைபெறுகிறது. பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சுவாமிநாதன் தலைமை வகிக்கிறார். சொ.சேதுபதி வரவேற்கிறார். "சிற்பி கவிதைகள்' தொகுப்பு நூல்களை ஆர்.நல்லகண்ணு வெளியிட, சிங்கப்பூர் எம்.ஏ. முஸ்தபா பெற்றுக்கொள்கிறார்.
÷சிற்பியின் "புதிர் எதிர் காலம்' நூலை கவிஞர் வைரமுத்து வெளியிட, இயகோகா சுப்பிரமணியம் பெற்றுக்கொள்கிறார். சிற்பியின் "மனம் புகும் சொற்கள்' நூலை விஞ்ஞானி ய.சு.ராஜன் வெளியிட, பார்க் நிறுவனங்களின் தலைவர் பி.வி.ரவி. பெற்றுக்கொள்கிறார்.
÷நவபாரதியின் "மெüனம் உடையும் மகாகவிதை' நூலை சாகித்ய அகாதெமி துணைத் தலைவர் விஸ்வநாத் பிரசாத் திவாரி வெளியிட, தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் செ.கார்மேகம் பெற்றுக்கொள்கிறார்.
நிறைவு விழா: இரவு 7 மணிக்கு நடைபெறும் நிறைவுவிழாவுக்கு சக்தி குழுமத் தலைவர் நா.மகாலிங்கம் தலைமை வகிக்கிறார். சிற்பியை கெüரவித்து நிறைவுரையாற்றுகிறார், முன்னாள் குடியரசுத் தலைவர் ஆ.பெ.ஜெ.அப்துல் கலாம்.
÷தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சி.சுப்பிரமணியம், பாரதீய வித்யாபவன் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர், உயர்கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன், தொழில்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, நடிகர் சிவகுமார், சந்திராயன் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
÷சிற்பி பவள விழா மலர் வெளியிடப்படுகிறது. சி.சுப்பிரமணியம் தலைமையிலான சிற்பி பவள விழாக் குழுவினர் விழா ஏற்பாடுகளைச் செய்துவருகின்றனர்.
திங்கள், 25 ஜூலை, 2011
Vivekanandar Express Coimbatore. சுவாமி விவேகானந்தர் கண்காட்சி ரயில்











































